விருப்பங்களை அனுபவங்களாக்க, செய்க தவம்

தவம் வரைவிலக்கணம்: தன் கடமையை நிறைவேற்ற, குறிக்கோளை அடைய, வேட்கையுடன் (தீவிர விருப்பத்துடன்) உடலை வருத்தியும், ஐந்து புலன்களை அடக்கியும் செய்யப்படும் வேள்வி (விருப்பத்துடன் செய்யும் செயல்) அல்லது திட்டம் (project).

தவத்தின் பண்புகள்:
> தனக்கு வரும் துன்பத்தை தாங்குவது, மற்றவர்க்கு துன்பம் செய்யாமல் இருப்பது தவத்தின் மூலக்கூற்று ஆகும்.
> கடமையை நிறைவேற்ற தவம் செய்தல் வேண்டும்.
> தவம் செய்யாதவர், தன் கடமைகளை நிறைவேற்றும் நோக்கில், உடனடி மகிழ்ச்சி (சிறிய நேரம் நீடிக்கும் இன்பம்) தரும் ஆசைகளை தீர்க்க உலகில் அங்கும் இங்கும் அலைந்து தன்னுள் கொடுக்கப்பட்ட வளத்தை போக்கி, வீண் முயற்சிகள் செய்வார்.
> உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தை கடைப்பிடிக்க முடியும், எனவே இவைகளின் அடிப்படை அம்சமான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலாகும்.
> தவம் ஆழ் மனநிலை மாற்றத்திறகானதோ, துறவிக்கானதோ மட்டும் அல்ல. தனிமனிதருக்கும் கவனம் சிதறாமல் அவருடைய கடமைகளையும், குறிக்கோள்களையும் நிறைவேற்ற உதவும் ஓர் ஆயுதம் ஆகும்.
> தவம் மேற்கொள்வது மூலம் ஐம்புலன்கள் மற்றும் அவைகள் மூலம் பிறக்கும் ஆசைகளை கட்டுப்படுத்தி, சுய ஒழுக்கத்துடன் சீரான வாழ்க்கையை அமைய ஏதுவாக இருக்கும்.

விளைவு:
> திட்டமிட்ட இலக்குகைகளை திட்டமிட்டவாறே தவத்தினால் அடையமுடியும்.
> தவ பயிற்சியாளர்கள் தன் மன ஆற்றல் மூலம் பகைவரை வீழ்த்தவும், நண்பர்களை உயர்த்தவும் முடியும்.
> தவ பயிற்சியாளர்களின் பண்புகளை கண்டு மற்றவர் அனைவரும் அவரை பின்பற்ற தொடங்குவர்.
> எதனையும் வெல்லும் ஆற்றல் உள்ளவராக மாறுவார் – விடா முயற்சியுடன் போராடும் குணம் அவரிடம் வளரும், மன வலிமை பெருகும்.
> தவ பயிற்சி பண்ணுவது மூலம் கிடைக்கிற சுய-விழிப்புணர்வு, உணர்ச்சி கட்டுப்பாடு, மன திண்மை, கவன கூர்மை ஆகிய பண்புகள் அவர்களின் மனதை வலிமை ஆக்கும்.
> தவ பயிற்சி செய்ய செய்ய செய்பவரின் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு ஆகிய பண்புகள் வளர்த்து அவரின் தனி மனித குணத்தை மேம்படுத்தும். இந்த நிலைமாற்று செயல் ஒருவருக்கு சுய விழிப்புணர்வு பெறவும் நுண்ணறிவு வளரவும் ஏதுவாக இருக்கும்.

செயல் வடிவங்கள்: ஒருவருடைய குறிக்கோளுக்கு ஏற்ப, விருப்பமாக வருத்தத்தை ஏற்படுத்தி கொள்வது

விரதம் (உண்ணாவிரதம், பேசவிரதம்), நோன்பு, பத்தியம், நேந்துகொள்வது, , வெறும் தரையில் உறங்குவது, குளிர்ந்த நீரில் குளிப்பது, அசைவ உணவை புறக்கணிப்பது, மிக நீண்ட நடை பயணம் மேற்கொள்வது, சுகங்களை துறப்பது, காலனி இல்லாமல் நடப்பது, பிச்சை எடுத்து சாப்பிடுவது, ஒரு வேலை மட்டும் சாப்பிடுவது.

தவசி: கடமையில் வெற்றி பெற தவம் அவசியமாகிறது. தடைகளையெல்லாம் தாண்டி, வரும் துன்பங்களையெல்லாம் ஏற்றுப் பொறுத்து எதிர்கொண்டு, வெற்றி என்ற இலக்கை வைத்து முயல்பவரே தவசி ஆவார். தவசிக்கு மனவுறுதியும் செயல் வன்மையும் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.