உலக வாழ்க்கையை அனுபவிக்க உயிர் முக்கியமானது. இந்த அனுபவங்களின் தரம் (quality of life experience) நன்னெறிகளை (moral values)கடைப்பிடித்து நடக்கும் ஒழுக்கத்தினால், மிகுந்த உயர் மட்டத்தை அடைகிறது. அதனால் அந்த ஒழுக்கத்தை (moral conduct) உயிரை விட முதன்மைப்படுத்தி கடைப்பிடிக்கவும்.
மனிதனின் உள்ளார்ந்த இயல்பே முன்னோக்கி நகர்வதாகும், இந்த முன்னேற்றத்திற்கான பயணத்தை நாம் கடைப்பிடிக்கும் நன்னெறிகள் வழி நடத்தி பயணத்தை சிறக்க செய்யும்.
Embracing moral discipline enriches an individual’s life, leading to a sense of greatness in the journey of becoming a better person. Prioritize and protect it above everything, even life itself. #131
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:131)


The essence of human nature is to move forward, and moral conduct shapes this pursuit of progress. Therefore, hold moral conduct in high esteem