- மானத்தோடு இரு, புகழோடு போ.
- படித்தபடி நட.
- கல்வி —> அறிவு —> பண்பு
- ஈதல் —> புகழ் (glory / legacy is the ultimate goal of life)
- ஒழுக்கம் > உயிர்
- ஈதல் > உயிர்
- பண்பு > அறிவு #997
- தோன்றின் புகழோடு தோன்றுக
- எந்த தகவல் ஆனாலும், யார் சொன்னாலும், கேள்வி கேள். #423
- உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு #110
- தத்தம் கருமமே கட்டளைக் கல். #505
- உயிருள்ளவரை மானத்துடன் வாழ்வதே #968 (வள்ளுவ வாழ்வின் குறிக்கோள்)
- பொருளாட்சி போற்றாதார்க் கில்லை #252
- மனிதர்கள் = வல்லமை உடையவர்கள் 20 % + 80 % ஆசைக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்கள்
- வல்லமை உடையவர்கள் 20 % = தவம் செய்பவர்கள்
- வல்லமை உடையவர்கள் = 5 புலன்கள் மூலம் எழும் ஆசை அனுபவங்களின் வழி மனதை போகவிடாமல் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்
- எண்ணம் = வாய்ச்சொல் = செயல்
- வாழ்க்கை = நேரம் = பணம்
- தவம் = தன் கடமையை நிறைவேற்ற, குறிக்கோளை அடைய, வேட்கையுடன் (தீவிர விருப்பத்துடன்) உடலை வருத்தியும், ஐந்து புலன்களை அடக்கியும் செய்யப்படும் வேள்வி (விருப்பத்துடன் செய்யும் செயல்).
- ஒழுக்கம் = நல்ல நடத்தை
- புகழ் = புகழ் = இறந்தபிறகும் பலர் நினைவில் நற்பெயருடன் வாழ்வது (reputation), சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது (impact), வாழ்ந்ததிற்கான அடையாளங்களை விட்டு செல்வது (legacy)
- மனிதனின் உள்ளார்ந்த இயல்பே முன்னோக்கி நகர்வதாகும் (to progress).
- உள்ளுறுதி காண்பதே பூமி-யில் உன் உயரம்.
- அறம் செய்ய விரும்பு
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்
Valluvar Strategy:
- தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபத்தை கையாள்வது முக்கியம் (#305)
- நிலையான வைப்பு திட்டம் (fixed deposit scheme): வறியவர்களின் பசியை போக்க செய்யும் செலவு (#226)
- கைமாறாகச் (நன்றியாக) செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை பொறுத்தது அல்ல, உதவி பெற்றவரின் மனப்பான்மை மற்றும் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். (#105)
- தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும். # 250
அதிர்ஷ்டம் = சரியான நேரம் + சரியான இடம் + சரியான வாய்ப்பு
அறிவு + திறமை + நேரம் => சேவை => அனுபவம் + பணம்