செல்வ செழிப்பான காலங்களில் பணிவுடனும், வறுமை சூழலில் தன் மான உணர்வுடன் இருப்பது சுய-வளர்ச்சி மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு அடித்தளம் .
செழிப்பில் பணிவாக இருப்பது வாழ்க்கையை சமநிலையுடன் அணுகவும், நடைமுறையை புரிந்து நடக்கவும், சுய-மதிப்பு, சுய-மரியாதையை உயர்த்தி நம் குணத்தை மேம்படுத்தும்.
சவாலான சூழலில் தன்மான உணர்வுடன் இருப்பது நாம் யார் என்று வரையறை செய்து, நம்முடைய உண்மையான பலத்தை, மீளும் தன்மையை, அர்ப்பணிப்பை நிரூபிக்கும்.
Staying humble in prosperity and upholding honor in adversity, shape and build one’s character over time. #963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
(அதிகாரம்:மானம் குறள் எண்:963)