தீயினால் ஏற்படும் உடல் காயங்கள் குணமடையக்கூடும், மேலும் தீ விபத்து பற்றிய நினைவகம் காலப்போக்கில் மங்கக்கூடும். ஆனால், புண்படுத்தும் வார்த்தைகளால் ஏற்படும் உணர்ச்சிக் காயங்கள், ஒருவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து வடுக்களை விட்டுச்செல்லும்.
மனம் தெளிந்தநிலையில், மற்றவர் மீது பரிவுடனும், அவரிடம் நேர்மறையுடனும், மரியாதையாகவும் தொடர்புக்கொள்வேன் என உறுதியுடன் இருந்தால் நம் வார்த்தைகளை நம் கட்டுக்குள் வைக்கலாம்.
The physical wounds caused by fire can heal, and the memory of the fire incident may fade over time. But the emotional wounds inflicted by hurtful words can leave lasting scars that may persist throughout one’s life. #129
mindfulness: மனந்தெளிநிலை என்பது “ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும்.
empathy: பரிவு, பச்சாத்தாபம், அந்த நபரின் சூழ்நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து மற்றவரின் உணர்வுகள் அல்லது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் திறன்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:129)
வருடங்கள் பல ஆனாலும் தோழி திட்டிய வார்த்தைகளின் வலி இன்னும் இருக்கிறது…