படி ஏற பயப்படும் அறிவாளிகள், பட்டியலின் கடைசி #729

நன்கு கற்று அறிந்த அறிவுடையவர்களாக இருந்தும், ‘மேடை பயத்தின்’ (public speaking fear) காரணமாக கற்ற அறிவை பகிர்ந்து கொள்ளத் தயங்குபவர்கள், அரைகுறை அறிவாளியாக கருதப்படுவர்.

தொடர்பு திறனை பெருக்குவது, பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது, தொழிலில் முன்னேற்றம் அடைவது,
தன் நம்பிக்கையை வளர்ப்பது, கல்வி அளிப்பது, கருத்துரை வழங்குவது, தொடர்பு வட்டத்தை பெரிதாக்குவது என பொது மேடையை பேச்சு திறமையின் பயன் பல.


மேடை பயத்தை போக்க:

  • பேச்சை பல முறை பயிற்சி செய்து, பொருள் பற்றிய நம்பிக்கையையும் பரிச்சயத்தையும் வளர்த்துக் கொள்ளவும்.
  • பேசுவதற்கு முன் உங்களை அமைதிப்படுத்த ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயன்படுத்தவும்.
  • ஒரு நேர்மறையான மனநிலையை உருவாக்க மற்றும் படபடப்பை குறைக்க வெற்றிகரமான விளக்கக்காட்சியைக் காட்சிப்படுத்தவும்.

People well-versed in knowledge, yet hesitant to share due to fear, may be perceived as having little worth. #729

கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்
(அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:729)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.