ஒருவர் நெறிமுறை தவறி நடந்தால் அவரின் குடும்பப் பெயரை களங்கப்படுத்தும், ஆனால் (ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்ய) அவமானப்படும் உணர்வு குறைந்து நிலைத்து விடுமானால், அது அவருடைய அனைத்து நலன்களையும் கெடுத்துவிடும்.
அவமானம் உணர்வு, நெறிமுறை நடத்தை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பராமரிக்க உதவும் முக்கியமான உணர்ச்சி கட்டுப்பாட்டாளர்.
இந்த உணர்வு இல்லாத போது, தனிமனித வளர்ச்சி குன்றி, குடும்ப மற்றும் சமுதாய உறவுகள் கெட்டு, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, மன நோயாளியாக மாறி, சட்ட ரீதியான சிக்கல்களை சந்தித்து, துயரமே வாழ்க்கையாகி மன நிம்மதி இல்லாமல் நடை பிணமாக உயிர் வாழ்வர்.
When one deviates from moral principles, it can harm their family’s reputation. When one lacks shame for wrongdoings and they persist, it may deprive all goodness and bring devastation to their lineage. #1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1019)
தவறு செய்யும் போது ஏற்படுகிற பயம் கலந்த அவுமான உணர்வுக்கு மதிப்பளித்து,
சீரழிவிலிருந்து காப்பாற்றி கொள்ளவும்