“ என் குடும்பத்தை உயர்த்தும் வரை நான் ஓயமாட்டேன்” என்று ஒரு தனிநபரின் ஆணித்தரமான சத்தியம், மனித வாழ்வியலின் மிகப்பெரிய முயற்சியின் முழக்கமாகும்.
சூளுரை: என் குடும்பம் உயர மேற்கொண்ட செயல் முடியும் வரை ஓயமாட்டேன்.
ஒவ்வொரு மனிதருக்கும் தன் குடும்பப் பொறுப்பு அவர் வாழ்வின் இயல்பு ஆகும். தன் குடும்பத்தை உயர்த்துவது அவர்களின் பிறப்பு கடன் மற்றும் கடமை ஆகும். அந்த கடமை முடியும் வரை நான் ஓய மாட்டேன் என ஒருவர் செய்யும் உறுதிமொழியே பெருமையிலும் பெருமையாகும்.
The solemn oath made by an individual “not to rest until uplifting their own family” represents one of the greatest endeavors of our shared human experience. #1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்.
(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1021)