நமுக்கு தீங்கு செய்தவர் செய்த ஒரு நல்ல செயலை நினைவில் கொள்வதன் மூலம் அவரை மன்னித்து அவர் செய்த மிக பெரிய தீங்கினையும் மறந்து விடலாம்.
மன்னிப்பது என்பது நமக்கு பாதகமான செயல்களை செய்தவரை மன்னிப்பதல்ல. மாறாக, ஏதோ ஒரு மூலையில் மனக்கசப்பைப் சுமந்து கொண்டிருக்கும் நம்மை எதிர்மறையான (நெகடிவ்) தாக்கத்திலிருந்து விடுவிப்பதாகும். மன்னிப்பு – உணர்வுகளை குணப்படுத்தும், உறவுகளை மேம்படுத்தும், தனிமனித வளர்ச்சி மற்றும் மிகவும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மன்னிப்பு நம்மை நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவும், இலகுவான இதயத்துடன் முன்னேறவும் நம்மை அனுமதிக்கும்.
Forgiveness can be extended even to those who cause significant harm by remembering at least one act of kindness from them. #109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:109)