ஒருவர் மகத்தானவரா அல்லது சாதாரணமானவரா என்பதை சமூக நிலைப்பாடு தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை; அவரின் குணாதிசயங்கள், செயல்கள் மற்றும் பங்களிப்புகள், அவர் யார் என்பதை உண்மையாக வரையறுக்கின்றன.
மனிதருக்குள் பெருமை- சிறுமை வேறுபாடு உண்டு. எல்லா நாட்டிலும், எல்லா சமூகமும் செல்வம், கல்வி, பதவி, செல்வாக்கு, சாதி, மதம், இனம் என்ற அடிப்படையில் சமூகம் நிலைப்பாட்டை தரும். சமூகம் வரையறைக்கும் இந்த நிலைப்பாட்டில் மேலான இடத்தில் இருந்தாலும், உயர்ந்த பண்புகள் (நன்னெறி நடத்தை, குணம், செயற்கரிய செயல்கள் செய்யும் ஊக்கம் ) இல்லாதவர் உயர்ந்த வகுப்பினர் ஆகார். இந்த நிலைப்பாட்டில் கீழான இடத்தில் இருந்தாலும், உயர்ந்த பண்புகள் உடையவர் கீழ் வகுப்பினர் ஆகார்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
(அதிகாரம்:பெருமை குறள் எண்:973)
Social standing does not necessarily determine whether one is extra-ordinary or ordinary; it is their character, actions, and contributions that truly define them. #973