ஒரு பணியில் ஈடுபடும் போது, வெளிப்புற காரணங்கள் நமுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், “முயற்சி” நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
உழைப்புக்கேற்ற பயன் உண்டு. எதை பற்றியும் கவலைப்படாமல், நீ உன்பாட்டுக்கு முயற்சியில் ஈடுபடு. உன் உழைப்பை விட்டுவிடாதே. எந்த முயற்சியும் பயனின்றி வீண் போகாது; உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும்.
Even if external factors are not favorable, the effort and hard work put into a task will still lead to the deserved outcome. #619
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619)
தினமும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி, மனக்கட்டுப்பாட்டுடன் சத்தான உணவு, கெட்ட பழக்கங்களுக்கு “வேண்டாம்” என சொல்லும் மன வலிமையுடன் இந்த சிறுவன் செய்த 2 வருட முயற்சியின் பலன்.