பிறர் மேல் நமக்குள்ள அன்பை, அருளை காட்ட, சீராக வளர்க்க, பணம் அவசியம். அந்த பணத்தை நல்வழியில் சம்பாதிக்க வேண்டும்.
பிறர் மேல் உள்ள அக்கறையை, அன்பை வெளிக்காட்டவும், நடைமுறைப்படுத்தவும், பலருக்கு நாம் செய்யும் அன்பின் சேவை போய் சேரவும், பணம் பெரிதும் உதவி செய்து, அருளை (தொடர்பு இல்லாதவர்களிடம் காட்டும் அன்பு ) வளர்கிறது.
எந்த தொடர்பும் இல்லாதவர்களிடம் காட்டும் அன்பே, அருள் ஆகும். அன்பிலிருந்து தோன்றியது தான் அருள். அது எல்லா உயிர்களிடத்துத் தோன்றக்கூடிய இரக்க குணம். பணம் இருந்தால் தான் அருள் உணர்வை நடைமுறை படுத்தி நம்மை சுற்றியுள்ள உயிர்கள் நலனையம் பாதுகாக்கவும், அவைகளின் துன்பத்தை போக்கவும் முடியும்.
நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்றால் நம்மிடம் இருக்க வேண்டியது அன்பும், அருளும், ஈகை குணமும், மட்டுமல்ல பணமும் வேண்டும். அதனால் நல்வழியில் பணம் சம்பாதிப்பது ஒவ்வுவொருத்தருக்கும் அவசியம்.
It’s money that can scale the impact of an individual’s virtuous deeds, providing yet another compelling reason to earn it. #757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால், உண்டு.
(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:757)