படித்து, அதனால் வரும் பயனை உணர்ந்து, உணர்ந்ததை அடுத்தவரிடம் பகிர்ந்து, பகிர்ந்ததை தனது தினசரி வாழ்க்கையில் பயன் படுத்த இயலாதவர்கள், பேதையிலும் பேதை.
படித்து, அதனால் வரும் பயனை உணர்ந்து, உணர்ந்ததை அடுத்தவரிடம் பகிர்ந்து, பகிர்ந்ததை தனது தினசரி வாழ்க்கையில் பயன் படுத்த திறமை இல்லாதவர்களே, படித்த முட்டாள் எனப்படுவர்.
Learning, realizing, and sharing, without applying in day-to-day situations is the height of insanity. #834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்
(அதிகாரம்:பேதைமை குறள் எண்:834)
பேதை = எதையும் பகுத்தறிந்து பார்த்துச் செயல்படத் தெரியாத தன்மை உடையவர்.
படித்தவன் எல்லாம் அறிவாளி அல்ல.