கண்காணி, காத்திரு, விரைவாக செயல்படு #490

கொக்கு அதன் இரையான மீனை கொத்துவது போல, வாய்ப்பு இல்லாத காலத்தில் பொறுமையாக இருந்து, கூரிய கவனிப்பு மூலம் வாய்ப்புகளை கண்டுபிடித்து, உத்திகளை துல்லியமாகவும், விரைவாகவும் செயல்படுத்தி வெற்றி பெறுவது நன்று.

வாய்ப்பு இல்லாத காலத்தில் கொக்கு போல கண்காணித்து கொண்டு ஆரவாரமில்லாது இருக்க வேண்டும்; காலம் கூடி வருகின்ற பொழுது அக்கொக்கு மீனை விரைந்து சென்று தப்பாது கொத்துவது போல செயலாற்ற வேண்டும்.

ஓடுமீன் ஓடட்டும்; உறுமீன் வந்தவிடத்து விரைந்து குத்திக் கொண்டு போ.

Like a crane hunting its catch, patience stages the scene, keen observation identifies opportunities, swift and strategic action seizes them, precise execution ensures success, and embracing victory follows. #490

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து
(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:490)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.