முக்கியமா, அவசரமா என வகை தெரிந்து செய்யவும் #672

முக்கியத்துவம் இல்லாத, உடனடி கவனம் தேவைப்படாத வேலையை காலம் தாழ்த்தி செய்யவும்; முக்கியமான, விரைந்து செய்யவேண்டிய வேலைகளை விரைவாக செய்யவும்.

முக்கியத்துவம் இல்லாத, உடனடி கவனம் தேவைப்படாத வேலையை காலம் தாழ்த்தி செய்யலாம்; முக்கியமான, விரைந்து செய்யவேண்டிய வேலைகளை விரைவாக செய்யலாம். இப்படி செய்ய வேண்டிய செயல்களை வகைப்படுத்தி முன்னுரிமை அளிப்பது மூலம் நமது நேரத்தை, ஆற்றலை, வளங்களை திறம்பட நிர்வகிக்கலாம்.

‘செயல் முன்னுரிமை அளிப்பது’ (Task Prioritization) என்பது ஒரு வேலையின் முக்கியத்துவம் (உங்கள் நீண்ட கால இலக்குகள் மற்றும் வெற்றிக்கான அதன் பங்களிப்பு) (importance) மற்றும் அவசரம் (எவ்வளவு விரைவில் முடிக்க வேண்டும்) (urgency) ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதை உள்ளடக்குகிறது.

Prioritization is crucial; depending on the nature and criticality of each task, some can be delayed, while others require immediate attention. #672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:672)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.