தனிமனித பலத்திலேயே பெரிய பலம்? #670

தான் மேற்கொண்ட வேலையின் மேல் இருக்கும் உறுதிப்பாடு தான் ஒரு தனிநபரின் அனைத்து பலங்களிலும் மிக பெரிய பலம்.

தீவிர கவனத்துடனும், ஊக்கத்துடனும், சிக்கல்களை தீர்த்து, “எடுத்துக்கொண்ட வேலையை முடிக்க போராடும் மனஉறுதியே” தனி மனித பலங்களிலேயே மிக பெரிய பலம்.

எத்தனை வகை பலம் பெற்றிருந்தாலும் செய்யும் வேலையில் உறுதிப்பாடு இல்லாதவரை உலகம் ஏற்காது.

எந்த வேலையையும் மன உறுதியுடன் செய்வது அடிப்படை பண்பு.

Among all strengths of an individual, determination towards the undertaken job stands as an undisputed, non-negotiable attribute for all times. #670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:670)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.