மனித வாழ்க்கையின் பயன் #231

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு கொடுத்தும் / பங்களித்தும் ஏற்படுத்தும் தாக்கமுமே மனித வாழ்க்கையின் அளவீடாகும்.

குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பங்களித்து பலர் வாழ்க்கையை மேம்படுத்துவதன் மூலம் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, பலர் நினைவில் இறந்த பிறகும் வாழ்வது தான், வாழ்ந்ததிற்காக ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம், இதை தவிர மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கு கிடைக்கும் பலன் ஒன்றும் இல்லை.

மனித உயிர்க்கு மதிப்பு எனப்படுவது ஈவதினால் உண்டாகும் புகழை பொறுத்தே மதிப்பிடப்படும்.

வாழ்க்கையின் நோக்கம் -> காலத்தைக் கடந்து உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது.

கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

The lasting essence of one’s life lies in the enduring contributions made to others, and the resulting legacy becomes a significant measure of an individual’s time on earth. #231

life’s purpose: to influence the world in a way that echoes through time, shaping future generations even in our absence.

Legacy: காலங்கள் கடந்து எதிரொலிக்கும் “தாக்கத்தை” உலகில் ஏற்படுத்து, உன் காலத்திற்கு பிறகும் எதிர்கால தலைமுறைக்கு கைகொடுக்கும்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
(அதிகாரம்:புகழ் குறள் எண்:231)

👧👦 குழந்தைகளே, ஒரு கேள்வி கேட்கிறேன்…
நம்ம வாழ்க்கைன்னா தினமும் சாப்பிட்டு, தூங்கி, விளையாடி,
பள்ளிக்குப் போய் வருவதுக்குத்தானா? 🤔

இல்லை!

திருவள்ளுவர் சொல்றார் –
மனித வாழ்க்கையின் உண்மையான பயன் என்ன தெரியுமா?

👉 நாம நல்ல படிப்பு படிக்கணும்.
👉 நம்முடைய அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளணும்.
👉 பிறகு வேலை செய்யலாமோ, நம்ம தன் தொழில் ஆரம்பிக்கலாமோ.
அப்படி பணி செய்து, பணம் சம்பாதித்து,
நம்மையும், நம் குடும்பத்தையும் உயர்த்தி,
சமூகத்துக்கு நல்லது செய்தால் –
அதுவே மனித வாழ்க்கையின் அர்த்தம்.

அப்ப தான் பிறர் நம்மைப் பற்றி பெருமையாக பேசுவாங்க.
நம்ம வாழ்க்கை, நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு உதவியதாக இருக்கும்.

👧👦 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் – அவர் மிகவும் வறுமையில் பிறந்தார்.
ஆனா, “நான் படிக்கணும்” என்ற பெரிய ஆசையோடு உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் படித்தார்.

👉 அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு:
அவர் தான் இந்திய அரசியலமைப்பின் முதன்மை உருவாக்குனர்.
அதாவது – நம்முடைய நாட்டில் அனைவரும் சமம், எல்லோருக்கும் உரிமை, சுதந்திரம் இருக்க வேண்டும் என்று விதிகளை எழுதியவர்.

🌟 அதனால்தான் இன்றும் மக்கள் அவரை பெருமையோடு நினைக்கிறார்கள்.

🌟 சிறிய takeaway for kids:
“வாழ்க்கை சாப்பிட்டு, தூங்குவதற்கானதல்ல.
படித்து, வளர்ந்து, சமூகத்துக்கு உதவுவது தான் வாழ்க்கையின் உண்மையான பயன்.”

Give to the world more than you take in. Provide, Give and Create impact.

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.