உலக இன்பங்களை அளவுக்கு அதிகமாகாமல் கண்ணியத்துடன் கையாண்டு, சமுதாயத்திற்க்கு பங்களித்து, தான் மறைந்த பின்னரும் தன் தாக்கத்தின் நீடித்த விளைவுகளின் மூலம் வாழ்பவரே, வாழ்வாங்கு-வாழ்பவர்.
நல்ல குணம், நல்ல செயல்களுடன், சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கையாகும்.
இகழ் நீங்கி, புகழ்பட வாழ்.
கெட்டபெயர் எடுக்காமல், நல்ல பெயர் எடுத்து வாழ்பவரே, வாழ்வாங்கு வாழ்பவர்.
மாமனிதன்: உலக இன்பங்களை அளவுக்கு அதிகமாகாமல் கண்ணியத்துடன் கையாண்டு, சமுதாயத்திற்க்கு பங்களித்து, தான் மறைந்த பின்னரும் தான் ஏற்படுத்திய தாக்கத்தின் நீடித்த விளைவுகளின் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
Legends are those who balanced worldly pleasures with honor, contributed significantly to the world, and left behind a lasting legacy. #240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
(அதிகாரம்:புகழ் குறள் எண்:240)