ஒருவர் தன் வாழ்க்கையில் நேர்மையாக நடந்தவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவரவர் இறப்பிற்குப் பின், அவரின் தாக்கத்தின்-விளைவுகளில் (சொத்து, பிள்ளைகள், செல்வாக்கு) தெரியும்.
ஒருவர் நேர்மையாக வாழ்ந்தாரா, லஞ்சம் வாங்கி வாழ்ந்தாரா என்பதனை அவருடைய வாரிசுகளின் வாழ்க்கை காட்டிவிடும்.
The legacy an individual leaves behind acts as a testament, providing evidence or proof of their commitment to the principle of fairness throughout their life. #114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:114)
Legacy = தாக்கத்தின் விளைவு (consequences of an impact) = சொத்து (assets) + பிள்ளைகள் + செல்வாக்கு (reputation, influence) = எச்சம் = வழித்தோன்றல்.

