எந்த நிலையிலும் மானம் காத்து வாழ்க # 961

கட்டாயம் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயலாக இருந்தாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த செயலை செய்தல் வேண்டாம்.

தேர்வில் வெற்றியை அடைய, வேலை கிடைக்க, பணம் சம்பாதிக்க, போட்டிகளில் வெற்றி பெற, தண்டனையில் இருந்து தப்பிக்க, ஏன் தாயின் பசியை போக்க கூட இழிவு தரும் செயலை செய்தல் வேண்டாம்.

பிறரின் அதிக அழுத்தத்தின் கீழ், தனிப்பட்ட ஆதாயத்திற்கான ஆசை, சகாக்களின் அழுத்தம், சமூக செல்வாக்கு, நிராகரிப்பு அல்லது தோல்வி பயம், தனிப்பட்ட இழப்பு இப்படி எதுவாக இறந்தாலும் மானத்தை கெடுக்க கூடிய செயல்களை செய்தல் வேண்டாம்.

Never compromise honor, no matter how essential the action. #961

Keeping your honor means making choices that you can be proud of, no matter how tempting it is to do otherwise.

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
(அதிகாரம்:மானம் குறள் எண்:961)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.