இறந்த உடலை வாங்கி தின்பவருக்கு, இது இல்லை #252

ஓர் உயிரை கொள்ள காரணமாக இருந்து, அந்த உயிரின் இறந்த உடலை வாங்கி தின்பவர் அருளை காக்க மாட்டாதாவராகி அருள் (எல்லா உயிருக்கும் அன்பு செலுத்துதல்) என்ற அறநெறி மூலம் பெறக்கூடிய அனுபவங்களை, பயனை இழந்துவிடுவர்.

பணத்தில் கவனமாக இல்லாதவர்களுக்கும், பொறுப்பான நிதிப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் செல்வத்தைக் குவிப்பது கடினம், அதனால் அவர்கள் செல்வத்தினால் கிடைக்கும் பல அனுபவங்களை, பயனை இழந்து விடுவர். அதுபோல, கொல்லப்பட்ட ஓர் உயிரின் உடலை வாங்கி தின்பவர் அருளை காக்க மாட்டாதாவராகி அருள் என்ற அறநெறி மூலம் பெறக்கூடிய அனுபவங்களை, பயனை இழந்துவிடுவர்.

பணத்தை பாதுகாப்பது போல் அருளும் காக்கப்பட வேண்டும்.

Accumulating wealth is hard for those who aren’t careful with money and lack responsible financial habits. #252-1

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:252)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.