காசு, துட்டு, money, money

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை # 252

பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு. #247

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள். #754

நல்லவழியில் சேர்த்த பணம் மிக அதிகமாக, அறச்செயல்களும், இன்பம் உண்டாக்கும் செயல்களும் எளிதாக செய்ய முடியும். # 760

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் #751

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:752)

உலக நடப்பு: ஒருவர் ஏதோ ஒரு வகையில் சிறந்து விளங்கினாலும் பணத்தை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் உலகம் அவரை மதிக்கும்; பொருளில்லாமல், வேறு பல திறன் கொண்டிருந்தாலும் அவரை உலகம் மதிக்காது.

பணம் இருந்தால் கேட்க ஆள் இருக்கும் # 1046

கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:332)

குறள் 480:

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.