பேசும் எதையும் செயலில் காட்டாதவர்களை எல்லோரும் வெறுப்பார்கள், மதிக்க மாட்டார்கள், அவரின் பயனில்லாத பேச்சை வைத்தே அவரையும் பயனற்ற நபர் என எல்லோரும் ஒதுக்குவார்கள்.
Those who engage in empty talk may find themselves disliked by many, and they may eventually join the wall of unworthy individuals. #191, #193
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:191)
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை
(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:193)
வெட்டி பேச்சும் பயனற்ற மனிதர்களும்.
அதிகார வரிசையின் அடிப்படையில், இந்த அதிகாரம் பேச்சாற்றல் (சொல்வன்மைக்கு என்ற தலைப்பில் தனி அதிகாரம் உள்ளது) பற்றியது அல்ல என தோன்றுகிறது. இது வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை பற்றியதாக கருதலாம்.1