சோம்பேறிகளின் மகா சக்தி #603

சோம்பேறிகள், பூமியில் தாங்கள் வாழும் காலம் முடிவதற்கு முன்னரே , தங்கள் பரம்பரையை முடிவுக்குக் கொண்டுவரும் திறன் கொண்டவர்கள்.

சோம்பேறிகள் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் செய்யாமல் தட்டிக்கழித்து, காரணங்கள் சொல்லி, மன உளைச்சல், உடல்நலப் பிரச்சினைகள், சமூக தனிமைப்படுத்தல், எதிர்கால திட்டமிடல் இல்லாமை, நிதி உறுதியற்ற தன்மை மற்றும் இறுதியில் உறவு முறிவு போன்றவற்றால் தங்கள் குடும்பத்தின் அடித்தளத்தை சிதைத்து விடுவார்கள்.

சோம்பேறிகளின் குடும்பம் அவனுக்கு முன் வேகமாக அழியும்.

Lazy people has the potential to bring an end to their lineage before their time on earth. #603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து
(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:603)

குந்தித் தின்றால் குன்றும் கரையும்.

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.