யார் மாமனிதர்? #26

சவாலான இலக்குகளை அடைய முயற்சி செய்து தனது வல்லமையை சோதிப்பவர் மாமனிதர். மற்றவர் வாழ்நாள் முழுவதும் தங்கள் வல்லமையின் அளவை தெரிந்து கொள்ளாமல், எளிய இலக்குகளை அடைந்து திருப்தி அடைவர்.

ஒரு தனிநபரின் மகத்துவம் அவர்கள் அடைய முயற்சிக்கும் இலக்குகளின் சவாலை பொறுத்தே அளவிடப்படுகிறது.

மாமனிதர்கள் தங்கள் நோக்கத்தை நோக்கி “மனதை செலுத்துவது” போன்ற அசாதாரணமான செயல்களைச் செய்கிறார்கள், அவர்களின் புலன்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளின்படி மனதை போக விடமாட்டார்கள். சாதாரணமானவர்கள் அசாதாரணமான வேலைகளைச் செய்ய முயற்சிப்பதில்லை.

Great ones do extraordinary works like “directing mind” towards their purpose and not going by the whims and fancies of their own senses. Normal ones don’t attempt to do extraordinary works. #26

The greatness of an individual is determined by the ambition of the challenging goals they pursue.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:26)

தனக்கு தானே பல முறை வேண்டாம் என்று சொல்லி, ‘இலக்கை’ நோக்கி மனதை செலுத்தி முயற்சி செய்வது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.