உலகில் இல்லாதவர்கள் அதிகமாக உள்ளனர், ஏனென்றால் மிகச் சிலரே தவத்தை செய்கிறார்கள்.
குறிக்கோளை அடைய வேட்கையுடன் (தீவிர விருப்பத்துடன்) உடலை வருத்தி ஐம்புலனையடக்கும் விருப்பத்துடன் செய்யும் செயலே (வேள்வியே), தவமாகும் . தனக்கு ஏற்படும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்திற்கான அடிப்படை கொள்கை.
Have-nots are more in the world because very few undertake thavam ^. #270
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
(அதிகாரம்:தவம் குறள் எண்:270 )
தவம்: குறிக்கோளை அடைய வேட்கையுடன் (தீவிர விருப்பத்துடன்) உடலை வருத்தி ஐம்புலனையடக்கும் வேள்வி (விருப்பத்துடன் செய்யும் செயல்). தனக்கு ஏற்படும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்திற்கான வடிவம்.