எண்ணியதை நனவாக்குதல் ஒரு ஆற்றல். அந்த ஆற்றலை வளர்க்கும் ஒழுக்கப் பயிற்சியே தவம்.
எண்ணியதை நனவாக்கும் ஆற்றலைப் பெறுபவர்கள் உலகில் சிலரே. ஏனெனில், அந்த ஆற்றலை வளர்க்கும் தவத்தை மேற்கொள்பவர்களும் சிலரே. பலர் இந்தத் திறனை வளர்த்துக்கொள்ளாமல், உடனடி இன்பங்களைத் தேடியே அலைகிறார்கள்.
Few in the world develop the capability to turn their intentions into reality, because few undertake Thavam—the discipline that builds this capability. Many never develop this capability; instead, they spend their lives chasing immediate pleasures.
உலகில் எண்ணியதை நனவாக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் அதிகமாக உள்ளனர், ஏனென்றால் அந்த ஆற்றலை வளர்க்கும் தவத்தை மிகச் சிலரே செய்கிறார்கள்.
குறிக்கோளை அடைய வேட்கையுடன் (தீவிர விருப்பத்துடன்) உடலை வருத்தி ஐம்புலனையடக்கும் விருப்பத்துடன் செய்யும் செயலே (வேள்வியே), தவமாகும் . தனக்கு ஏற்படும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்திற்கான அடிப்படை கொள்கை.
Under-achievers are more in the world because very few undertake thavam ^. #270
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
(அதிகாரம்:தவம் குறள் எண்:270 )
தவம்:
தவம் என்பது ஐம்புலன்களை அடக்கி, துன்பங்களைத் தாங்கி, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல், உயரிய இலக்குகளை அடைவதற்கான ஒரு வழிமுறை (method).
குறிக்கோளை அடைய வேட்கையுடன் (தீவிர விருப்பத்துடன்) உடலை வருத்தி ஐம்புலனையடக்கும் வேள்வி (விருப்பத்துடன் செய்யும் செயல்). தனக்கு ஏற்படும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்திற்கான வடிவம்.


