நல்ல நடத்தையிலிருந்து தவறுவதால் உண்டாகக்கூடிய விளைவுகளை உணர்ந்து, ‘உள்ளத்தில் உறுதி’ உள்ளவர்கள், எந்த சூழ்நிலையிலும், ஒழுக்க கேடான செயல்களை செய்ய மாட்டார்கள்.
வாழ்வில் நல்ல நடத்தையுடன் நிலைத்து நிற்க ‘உள்ள உறுதி’ வேண்டும்.
Only a few consciously manage their reactions, weighing the consequences and striving for outcomes with strong will-power that align with their values and goals. #136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:136)
ஒழுக்கம் (conduct): நடத்தை – நன்னெறிகளை பின்பற்றி நடப்பது.
ஒழுக்கம் (discipline): ஒரு நோக்கத்திற்காக தொகுக்க பட்ட விதிகளையோ, கொள்கைகளையோ, அல்லது கோட்டபாடுகளையோ பின்பற்ற மேற்கொள்ளும் தொடர் பயிற்சி ஆகும்