வயது கூடுவதால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைவதில்லை (Growing older Vs Growing up); தனது சொல்லுக்கும், செயலுக்கும், முடிவுகளுக்கும் பொறுப்பேற்கும்போதுதான் உண்மையான முதிர்ச்சி உருவாகிறது, வாலிப வயதிறனராக கருதப்படுவர்.
நான்கு உறுதிமொழிகள் எடுத்தவரா நீங்கள்:
1. வாக்குறுதி (Keep Your Promises)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். # 664
தலைமை கொள்கை:
சொன்னதைச் செய்யுங்கள். உங்கள் செயல்களின் மூலம் உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள். (Do what you say. Make your words trustworthy through your actions.)
உறுதி மொழி:: என் சொல்லை நீங்கள் நம்பலாம்.
2. சுயக்கட்டுப்பாடு (Master Your Impulses)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. #126
தலைமை கொள்கை:
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துங்கள். தீய ஆசைகளுக்கும் தூண்டுதல்களுக்கும் இடமளிக்காதீர்கள். உடனடியாகக் கிடைக்கும் இன்பத்தைவிட, உயர்ந்த நோக்கத்துடன் செயல்படுவதைத் தேர்ந்தெடுங்கள்.(Govern your five senses, resist harmful temptations, and choose purposeful action over immediate gratification.)
உறுதி மொழி: என் ஆசைகளுக்கு அடிமையாகாமல், என்னை நானே ஆளும் ஆற்றல் கொண்டிருப்பேன்.
3. பொறுப்புணர்வு (Take Responsibility)
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. # 981
தலைமை கொள்கை:
நன்மை செய்வதை உங்கள் கடமையாகக் கருதுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். (Recognize doing good as your duty. Take ownership of your responsibilities to yourself, your family, and society.)
உறுதி மொழி: என் முடிவுகள், செயல்கள், கடமைகள் ஆகியவற்றிற்கு நானே பொறுப்பேற்பேன்.
4. பண்பாளர் (Become a Person of Substance)
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. # 982
தலைமை கொள்கை:
உயர்ந்த நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உங்கள் தோற்றத்தாலோ, செல்வத்தாலோ, சமூக அந்தஸ்தாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. உங்கள் நற்பண்புகளும், ஒழுக்கமும், செயல்களுமே உங்கள் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்கின்றன. (Build genuine character. Your worth is measured not by your appearance, wealth, or status, but by your qualities and conduct.)
உறுதி மொழி: என் நற்பண்புகளும் செயல்களுமே என் மதிப்பைத் தீர்மானிக்கும்.

____________________________________________________________________________________
Adulthood is not merely about growing older. It is about becoming someone who can be trusted, who governs themselves, accepts responsibility, and lives with character.
சான்றோன் என்பவன் நற்பண்பும், நேர்மையும், மனவலிமையும், அறிவும், செயல்திறனும் கொண்டவன். அவனது பெருமை அவன் சொல்லில் அல்ல; அவன் செயலிலும், ஏற்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலும் வெளிப்படும்.
